செய்யுளியல்

349சீர்நிலைதானே ஐந்தெழுத் திறவாது
நேர்நிறை வஞ்சிக் காறும் ஆகும்.

என்-னின். சீர்க்கு எழுத்து வரையறை உணர்த்துதல் நுதலிற்று.

சீர்நிலை ஐந்தெழுத்தின் மிகாது நேர் இறுதியாங் காலத்து: நிரையீறாகிய வஞ்சியுரிச்சீர்க்கு ஆறொழுத்தும் ஆகும் என்றவாறு.

எனவே இருபதெழுத்தின் மிக்க நாற்சீரடி யில்லை யென்றவாறாம் வஞ்சிச்சீர் முச்சீரடியின்கண் வருதலின்.

(39)