செய்யுளியல்

350 எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே
குன்றலும் மிகுதலும் இல்லென மொழிப.

இதுவஞ் சீர்க்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று .

ஈண்டோதப்பட்ட அடிகள் பலதொடுக்கும் வழி ஓரடிக்கோரடி எழுத்தளவு குறைந்துவரினுஞ் சீர்நிலை நான்கின் இழிதலும் மிகுதலு மில்லை என்றவாறு.

(40)