என்-னின். இதுவும் வஞ்சியடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வஞ்சியடி மூன்று சீரானும் வரும் இடனுடைத்து என்றவாறு. எனவே வஞ்சியடி இருசீரடியானு முச்சீரடியானும் வரும் என்றவாறாம். உதாரணம் "தூங்குகையான் ஒங்குநடைய உறழ்மணியான் உயர்மருப்பின" (புறம்.22) இதனுள் மூன்றெழுத்து முதலாக ஆறெழுத்துக் காறுஞ் சீர் வந்த வாறும் இருசீரடியாயினவாறுங் காண்க. `தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல்'. (யாப் வி.பக்.108) எனவும் வரும். (44)
|