என்-னின். மேற்சொல்லப்பட்ட அடி விரவிவருமாறு வரையறுத்து ஊணர்த்துதல் நுதலிற்று. மேற் சொல்லப்பட்ட ஐந்தடியுந் தனித்தனி ஆசிரியப்பாவிற் குரித்தாகி வருதலே யன்றி விரவிவரினும் நீக்கப்படாது என்றவாறு . 'ஒருஉநிலை' என்றதனால் தனித்தனிவரினும் விரவிவரினும் ஒக்கும் என்றுகொள்க. உதாரணம்"செங்களம் படக்கொன் றவுணர்ந் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழறொடிச் சேய1 குன்றங் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே" (குறுந். 1) இதனுட் பலவடியும் வந்தவாறு காண்க.(49)
'1. சேஎய்
|