என்-னின். ஆசிரியத் தளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று .சீர்கள் தம்முட்பொருந்தும்வழி நிலைமொழியாகிய இயற்சீரினீறும் வருமொழியாகிய சீரின் முதலசையும் நேராய் ஒன்றின் நேரொன்றாசிரியத் தளையாம்;நிரையாய் ஒன்றின் நிரையொன்றாசிரியத்தளையாம் என்றவாறு . இரண்டசையும் ஆசிரியத்தளை எனவேண்டுதலின் பொதுப்படக் கூறினார்.அவ்வழி வருஞ்சீர் இயற்சீராயிற் சிறப்பின்றெனவுங் கொள்க. (51)
1. சீரியை மருங்கின் ஓரசையே வரின் என்னாது 'ஒப்பின்' என்றது என்னையெனின் உரியசை முதலும் ஈறும் ஆகியவழி அவைஇயலசையோடு ஒப்புமை நோக்கித் தளைகொள்ளின் அல்லது தம்மோடு தாம் ஒன்றுதல் கொள்ளார் என்றற் கென்பது இதனானும் பெற்றாம்.....இனி 'ஈரசை ஒப்பின் என்பது பாடமாக உரைப்பின் நேரும் நிரையும் ஒன்றினென்றவாறுமாம் ' எனக்கொள்க.(தொல்,பொருள்,(368),பேரா.) 2. (பாடம்.) சீரியை. 3. றறையல்.
|