என்-னின்.இதுவுங் கலியடிக் குரியதோர் தளை உணர்த்துதல் நுதலிற்று. பிறவாகி விரவிய தளையும் நீக்குதலில்லை என்றவாறு. அஃதாவது வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவுதல். "இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந் துயர்மலை இருந்தனன் ஆக ஐயிரு தலையின் அரக்கர் கோமான்." (கலித். 38) இதன்கண் முந்துற்ற இரண்டுசீரும் வெண்சீர்வெண்டளை இரண்டாஞ்சீரோடு மூன்றாஞ்சீர் இயற்சீர் வெண்டளை; நாலாஞ்சீரோடு மற்றையடிமுதற்சீர் நிரையொன்றாசிரியத்தளை; 'அரக்கர் கோமான்' நேரொன்றாசிரியத்தளை. அஃதேல், நேரீற்றியற்சீர் கலிக்கண் வரப்பெறா தென்றதென்னை? ஈண்டுக்கோமான் வந்ததால் எனின், அவ்விலக்கணங் கலித்தளையான் வரும் அடிக்கென்க.சிறுபான்மை வஞ்சித்தளை வருதலுங் கொள்க. (56) 1. இன்றே.
|