என்-னின்.இதுவுமது அறுசீரடி யாசிரியத்தளையொடு பொருந்தி நடைபெற்று வரூஉம், நேரடிக்கு முன்னாக ஆசிரியப்பாவின்கண் என்றவாறு. ஆசிரியப்பா என்ப ததிகாரத்தான் வந்தது. "சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்படத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே." (புறம். 235) என்பதன்கண் முதலடி நாற்சீரான் வந்தது.இரண்டாமடி ஆசிரியத்தளையொடு பொருந்தி யறுசீரடியாகி வந்தது.'பொருந்தி' என்றதனான் அத்தளை சில வருதல்கொள்க. ஏனையவை புணருஞ்சீரான் வந்தன. (59)
|