செய்யுளியல்

373ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும்
மூவகை யடியு முன்னுதல் இலவே.
என்-னின். எய்தியது விலக்குதல் நுதலிற்று.

1முடுகியலாகி வரு மூவகை யடியும் ஆசிரியப்பா வினும் நிற்றல் இல என்றவாறு.

எனவே 2கலிப்பாவினுள் நிற்கப்பெறும் என்றவாறாயிற்று.

உதாரணம் முன்னர்க் காட்டுதும்.

'நாற்சீர் கொண்டதடி' என வோதிப் பின்னும் இருசீரடி வஞ்சிக் கண் உரித்தென ஓதி ஐஞ்சீரடியும் அறுசீரடியும் எழுசீரடியும் உள என ஓதினமையான். 3அடியாவது இரண்டு முதலாக வருமெனவும் அவற்றுள் இருசீரடி குறளடி எனவும் முச்சீரடி சிந்தடி எனவும் நாற்சீரடி அளவடி எனவும் ஐஞ்சீரடி நெடிலடி எனவும்4 அறுசீர் முதலாக வரும் அடியெல்லாங் கழிநெடிலடியா மெனவும் பிறநூலாசிரியர் கூறிய இலக்கணமும் இவ்வாசிரியர்க்கு உடம்பாடென்றுகொள்க. 5அறுசீர் முதலான 6அடிகளுள் 7எழுசீர் எண்சீர் சிறப்புடையன எனவும் எண்சீரின் மிக்கன சிறப்பில்லன எனவும் அவ்வாசிரியருரைப்ப.இவ்வாசிரியரும் அடிக்குச் சீர் வரையறையின்மை ஆங்கனம் விரிப்ப வளவிறந் தனவே .பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை (செய்யுளியல்-49) என்றதனான் உணர்த்தினார் என்று கொள்க. ஈண்டு நாற்சீரடியை எடுத்தோதியது வெண்பாவும் ஆசிரியப்பாவுங் கலிப்பாவும் அவ்வடியினால் வருதலின் என்று கொள்க.

(62)

1. முடுகியலாகிய.
2. (பாடம்) கலிப்பாவினறியப் பெறுமாயிற்று.
3. அடியாவதற்கு முடுகியல் நீக்கப்படா தென்றவாறு. எனவே,கலிப்பாவிற்கு அடியாவது இரண்டசை.
4. அறுசீரடி.
5. அறுசீரடி.
6. அடிகளின.
7. எண்சீரிறுதி சிறப்புடைத் தெனவும்.