செய்யுளியல்

374ஈற்றயல்1 அடியே ஆசிரிய மருங்கில்
தோற்ற முச்சீர்த் தாகு மென்ப.
என்-னின். இதுவும் ஆசிரியப்பாவிற் குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

ஆசிரிப்பாவின் ஈற்றயலடி தோன்றுமிடத்து முச்சீர்த்தாகவும் பெறும் என்றவாறு.

உதாரணம்

"முதுக்குறைந்தனளே முதுக்குறைந் தனளே
மலையன் ஒள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே."

இதனுள் ஈற்றயலடி முச்சீரான் வந்தது.
(63)

1. 'முச்சீர்த்து' என்று ஒருமை கூறினமையின் அஃது ஒன்றாகலும், தொடையுணர்வோர் என்றமையின் இடைவருவன இரண்டாகலுங் கூறினான் என்பது.(தொல்,பொருள்.380.பேரா.)