என்-னின். இதுவுமது. மேற்சொல்லப்பட்ட முச்சீரடி ஆசிரியப்பாவினுள் இடையும் வரப்பெறும் என்றவாறு. "நீரின் தண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாவே." இதனுள் மூன்றாமடியும் நான்காமடியும் முச்சீரான் வந்தவாறு கண்டு கொள்க. 1. (பாடம்) தொடை உணர்வோரே.(64)
|