செய்யுளியல்

376முச்சீர்1 முரற்கையுள் நிறையவும் நிற்கும்.
என்-னின். கலிப்பாவிற்கு ஈற்றுவேறுபாடு ;உணர்த்துதல் நுதலிற்று.

ஈற்றயலடி முச்சீரெனவோதப்பட்டது கலிப்பாவின் கண் நாற்சீர் ஆகியும் வரும் என்றவாறு.

இச்சூத்திரம் எதிரது நோக்கிக் கூறப்பட்டது ; 'எழுசீரிறுதி யாசிரியங்கலியே.' (செய்யுளியல்-72) என ஓதுகின்றாராதலின்.

உதாரணம்

"அரிமான் இடித்தன்ன"

என்னும் பாலைக்கலியுள். 2சுரிதகம்

"முளைநிரை முறுவல்3 ஆயத்துள் எடுத்தாய்ந்த
இளமையுந் தருவதோ இறந்த பின்னே."

(கலித். 15)
என ஈற்றயலடி நாற்சீரான் வந்தது.4
(65)

1. நிறைய நிற்றல் என்பது அச்செய்யுள் முழுதும் அவ்வடியே வருதலாம்.உம்மையான் ஒரு செய்யுள் நிறையவாராது ஒன்றும் இரண்டும் பலவுமாகி அம் முச்சீரடி வருதல் பெருவரவிற்று என்பது .தாங்குறைந்த அடியாதலிற் கலிப்பாவிற்கு உறுப்பாகிய சின்னத்துக் குறைய நிற்கும் இயல்பினவாயினும்,நிறைய நிற்றலுடைய கொச்சகத்துள் என்றவாறு.(தொல்,பொருள்.383.பேரா.)
2. (பாடம்) கொச்சகக் கலியினுள்.
3. முறுவலராயத்து.
4. வந்தவாறு கண்டு கொள்க.