செய்யுளியல்

378வெண்பா ஈற்றடி1 முச்சீர்த் தாகும்
அசைச்சீர்த் தாகும் அவ்வழி யான.2
என்-னின்.வெண்பாவிற்கு இறுதியடியும் இறுதிச்சீறும் உணர்த்துதல் நுதலிற்று.

வெண்பாவினீற்றடி மூன்றுசீரையுடைத்தாகும். அதன்கண் இறுதிச்சீர் அசைச்சீரான் வரும் என்றவாறு.

3உதாரணம் முன்னர்க்காட்டுதும்.

(67)

1. வெண்பாட்டீற்றடி.
2. அசைச்சீராகு மவ்வயினான.
3. ஒருபடியில் காணப்படுவது ;

"பாசடை வெண்பாட் டவரே வடியானிசிற்
சமநிலை வெண்பாட் டெனப்பெயர் பெறும்"

என்பாரும் உளராலே தென்பவாறு வந்தவழிக் காண்க."