என்-னின். மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. வெண்பாவி னிறுதிச்சீரின் அயற்சீர் நேரீற்றியற் சீராயின் நிரையசையும் நிரைபு அசையுஞ் சீராந்தன்மையைப் பெற்று முடியும்.1 இயற்கையையுடைய என்றவாறு உதாரணம்"கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை." (குறள். 9) "தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது." (குறள். 7) எனவரும்.(68) 1. பெறுமுடிபாகும்.
|