செய்யுளியல்

380நிரையவண் நிற்பின் நேரு நேர்பும்
வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர்.
என்-னின்.இதுவுமது.

வெண்பாவி னீற்றயற்சீர் நிரையீற் றியற்சீராயின் நேரசையும் நேர்பசையும் முடிபாம் என்றவாறு.


உதாரணம்

"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி1
வாலெயி றூறிய நீர்."

(குறள். 1121)

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல2
தன்றே மறப்பது நன்று."

(குறள். 108)
எனவரும்.

'வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே'

(செய்யுளியல். 28)
என்பதனான் ஈற்றயற்சீர் முதலசையான் வரினும் நேரும் நேர்பும் முடிபாகக் கொள்ளப்படும்.3

உதாரணம்

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்."

(குறள். 10)

"இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு."

(குறள். 5)
எனவரும்.
(69)

1. (பாடம்) பனிமொழி.
2. நன்றல்லா.
3. கொள்ளப்படுமென்றவாறு.