| என்-னின். கலிப்பாவிற்கு முடிபுணர்த்துதல் நுதலிற்று. கலிப்பாவிற்கு ஈற்றயலடி முச்சீரான்வரும் ஆசிரியமுடிபாகும் என்றவாறு. உதாரணம்"தொடங்கற்கட் டோன்றிய" என்னும் கலியுள், சுரிதகம்."தொல்கவின் தொலைதல் அஞ்சியென் சொல்வரைத் தங்கினர் காத லோரே." (கலித். 2) என வந்தது. ஈற்றயலடி நாற்சீரான் வருமென்பது மேற்கூறப்பட்டது.(70) 1. முச்சீர். 2. எழுசீர் இறுதி ஆசிரியம் எனவே ஆசிரிய அடி பலவும் வந்து எருத்தடி முச்சீராக என்பது கொள்க........(தொல்,பொருள் 388, பேரா.)
|