என்-னின். கலிப்பா வெண்பாச்சுரிதகமாக முடியும் என்றவாறு.
உதாரணம்."அறனின்றி அயல் தூற்றும்" என்னும் கலியுள், சுரிதகம்."யாநிற் கூறவும் எமகொள்ளாய் ஆயினை ஆனா திவள்போல் அருள்வந் தவைகாட்டி மேனின்று மெய்கூறுங் கேளிர்போல் நீசெல்லுங் கானந் தகைப்ப செலவு." (கலித். 3) என வெண்பாவினியலான் இற்றவாறு காண்க.இத்துணையும் அடியிலக்கணம். 1. பண்புற என்பது விசேடம்; மிகமுடியும் என்றவாறு. எனவே,ஈண்டுக் கூறாத இரு சீரடியானும், நாற்சீரான் வந்த கலிப்பா அடியானும் ஐஞ்சீரடியானும் முடிவன கொச்சகக் கலியுள்; அவை இத்துனை விசேடம் இல என்றவாறு... பண்புற என்றதனான் மூன்றடியின் இழியிற் பண்புடவாரா வெள்ளைச் சுரிதகம் எனவும் கொள்க.(தொல்,பொருள்,389. பேரா.)(71)
|