என்-னின். வெண்பாவிற் குரிய ஓசை உணர்த்துதல் நுதலிற்று. வெண்பாவாக யாக்கப்பட்டது அகவலோசையன்று என்றெவாறு. எனவே அகவுதலில்லாத ஓசையாம் . இதனைப் பிறநூலாசிரியர் செப்பலோசை என்ப . அகவுதல் என்பது ஒரு தொழில் . அத்தொழில் இதன்கண் இல்லாமையின் அஃதன்று என்றார் . உதாரணம்" பொன்னார மாற்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர் உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கன்னோ மனனோடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப் புனல்நாடன் பேரே வரும் ." (முத்தொள். 104) இது மேற்சொல்லப்பட்டதுபோல இசைகுறித்து வருதலின்றிச் செப்புதலாகிய வாக்கியம் போன்ற ஓசைத்தாகி வந்தவாறு காண்க. 1. (பாடம்) அஃதான் .(76)
|