என்-னின், வஞ்சிப்பாவிற்குரிய ஓசை உணர்த்துதல் நுதலிற்று. தூங்கலாவது அறுதியற்ற ஓசைத்தாகி வரும் வஞ்சி என்றவாறு. "சுறமறிவன துறையெல்லாம் இறவீன்பன இல்லெல்லாம் மீன் திரிவன கிடங்கெல்லாந் தேன்தாழ்வன பொழிலெல்லாம் எனத் தண்பணை தழீஇய இருக்கை மண்கெழு நெடுமதில் மன்னன் ஊரே." (யாப்.வி.பக்.63) இதனுட் சீர்தோறும் ஓசை யற்றவாறு கண்டுகொள்க.(79)
|