செய்யுளியல்

3901மருட்பா ஏனை இருசார் அல்லது
தானிது என்னுந்2 தன்மை யின்றே.
என்-னின், மருட்பாவிற்கு ஓசை இதுவென உணர்த்துதல் நுதலிற்று.

மருட்பாவிற்கு ஓசை இதுவென்னுந் தன்மை இல்லை; அதற்கு வெண்பாவும் ஆசிரியப்பாவும் உறுப்பாக, இவ்விரண்டின் ஓசையே அதற்கு ஓசை என்றவாறு.

"திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும்
இருநிலனுஞ் சேவடி யெய்தும்3 அரிபரந்த
போகிதழ் உண்கண் இமைக்கும்
ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே."

(பு.வெ. கைக்கிளை.3)
என்பதனுட் கண்டுகொள்க.
1. செப்பல் முன்னாகவும் அகவல் பின்னாகவும் வருவதாயிற்று மருட்பா , இனி, நிறுத்த முறையானே கோள்வார் வெண்பா முதல் அகவல் பின்னாகவருவது மருட்பா அன்றெனவும் வெண்பா ஒழித்து ஒழிந்தபாதம் முள் மயங்குவனவே மருட்பா எனவும் கூறுப. கலிப்பாவும் வஞ்சிப்பாவும் ஆசிரியத்தோடும் வெண்பாவோடும் மயங்கி இறினும் அவை மருட்பா எனப் படாமையின் அது பிழைக்கும் என்பது.(தொல்,பொருள்,பேரா.)
2. (பாடம்) தனிநிலை.
3. (பாடம்) இருநிலம் சேவடியும் தோயும்.