செய்யுளியல்

3921தூக்கியல் வகையே ஆங்கென மொழிப.

என்-னின், ஐயமறுத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

மேல் அதிகாரப்பட்ட தூக்கியலும் வகை சொல்லப்பட்ட நாலுமே என்றவாறு.

எனவே, இன்னும் உளவோ எனக்கருதற்க வென ஐயந்நீர்த்தவாறு.ஈங்கு ஓதப்பட்ட தூக்குச் செவிப்புலனாதவின் அதனானே ஓர்ந்துணர்ந்து பாகுபாடறிக.

(81)

1. தூக்கென்பது சொல்லின் முடியும் இலக்கணத்திற்றது. தூக்கென்பது நிறுத்தலும் அறுத்தலும் பாடலும் என்று இன்னோரன்னவற்று மேல் நிற்கும்; ஈண்டும் அவ்வாறே பாவினை இத்துணை அடிஎன நிறுத்துக் கூறுபாடறிதலும் அவ்வத் தூக்குள்வழிச் சொல்லுவாரது உறுப்பு, விகாரப்பட்டு ஓடுவது போன்று அசையுமாறும் கண்டுகொள்க. (தொல், பொருள், 399, பேரா.)