செய்யுளியல்

393மோனை எதுகை முரணே இயைபென
நால்நெறி மரபின தொடைவகை என்ப.

என்-னின், தொடைப் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

மோனை எனவும் எதுகை யெனவும் முரணெனவும் இயைபெனவும்பட நான்கு நெறிப்பட்ட மரபினையுடைய தொடையினது பாகுபாடு என்றவாறு.

உதாரணந் தத்தஞ் சிறப்புச் சூத்திரங்களுட் காட்டுதும்.

(82)