என்-னின், இதுவுமது. அளபெடைத் தொடையோடே கூட ஐந்தென்று சொல்லவும்பெறும் என்றவாறு. (83)
1. நான்கின்மேல் ஒன்றேறியக்கால் ஐந்தாம் என்பது ஈண்டுச் சொல்லவேண்டுவதன்று பிற எனின் , அற்றன்று; நான்கினொடு ஒன்றினையே சொல்லுகின்றானாயின் அது கடா ஆவது; ஐந்தெனவு ஆறெனவும் படும் என்றதற்கு இது கூறினான்; எனவே, உயிரளபெடையும் ஒற்றளபெடையும் என அளபெடை இரண்டாதலின் என்பது.(தொல், பொருள், 401, பேரா.)
|