என்-னின் இதுவுமது. பொழிப்பெனவும் ஒரூஉ வெனவும் செந்தொடையாம் எனவும் அமைந்தன ஆராயின் அவையுந் தொடைப்பாகுபாடாம் என்றவாறு. (84)
1. 'அமைத்தனர் தெரியின் ' என்றதனான் அமையுமாற்றான் அமைத்துக் கொள்ளப்படும் . யாங்ஙனம் பொழிப்பும் ஒரூஉவும் ஓரடியுள்ளே வரும் எனவும் செந்தொடை ஓரடியுள்வரினும் இரண்டடியான் அன்றி அறியவாராதெனவும் கொள்க. 'அவையுமாருளவே ' என்ற உம்மையான் இவைபோல ஓரடிக் கண்ணே வரும் முற்றெதுகையும் கிளைமுற்றெதுகையும் இரண்டந் தாதியும் இருவகை விட்டிசைத் தொடையும் கொள்ளப்படும் .(தொல், பொருள், 402, பேரா.) 2. (பாடம்) அமைத்தனர்.
|