என் - னின். இதுவுமது. நிரலே நிறுத்தியமைத்துக் கோடலும் இரட்டைத் தொடையும் மேற்சொன்னவற்றான் முடியவும் பெறும் என்றவாறு. நிரனிறைத் தொடையாவது பொருளைச் சேரநிறுத்திப் பயனையுஞ் சேரநிறுத்துதல். இரட்டைத்தொடையாவது ஓரடிமுழுவதும் ஒரு சொல்லேவருதல். இத்துணையுங் கூறப்பட்டது அடிதொறும் வருவன ஐந்தொடை எனவும் அடிக்கண்வருவன ஐந்துதொடை எனவும் அவ்வைந்தும் மூன்றாகி அடங்குமெனவும் கூறியவாறாம். (85)
|