செய்யுளியல்

397அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை.

என் -னின். மோனையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அடிதோறும் தலையெழுத்து ஒப்பது மோனைத் தொடையாம் என்றவாறு .

அஃதேல் 'அடியுள் ளனவே தளையொடு தொடையே ' (செய்யுளியல் . 32) எனவோதி ஈண்டும் அவற்றை யடியினும் வருமென்றல் பொருந்தாதெனின் ஆண்டு மற்றையடியில் வாராதென்றா ரல்லர்; அடியல்லாத உரைமுதலாயினவற்றில் தளையொடு தொடையில்லை என்பார் 'அடியுள் ளனவே தளையொடு தொடையே' என்றார்.

"மாவும் புள்ளும் வதிவயின் படர
மாநீர் விரிந்த பூவுங் கூம்ப
மாலை தொடுத்த கோதையுங் கமழ
மாலை வந்த வாடையும்
மாயோய் நின்வயின் புறத்திறுத் தற்றே"

(யாப். வி. ப. 130)
எனவரும்.

(86)