செய்யுளியல்

402அளபெழின்1 அவையே அளபெடைத் தொடையே.

என்-னின். அளபெடைத்தொடையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அடிதொறும் அளபெழுத் தொடுப்பின் அஃது அளபெடைத் தொடையாம் என்றவாறு.

"ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் 2இதற்பட்டது.'

(குறள்.1176)

எனவரும்.
(91)

1. அளடுபெடைத் தொடை இரண்டுங் கூட்டிப்பெற்ற தொடை (378) ஆக முதற்றொடை இருபத்திரண்டானனும் பெற்ற தொடை (9820) (தொல். பொருள். 406. பேரா.)

2. இடர்ப்பட்டன.