என்-னின். பொழிப்புத்தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஒரு சீரிடை யிட்டு எதுகையிற் பொழிப்புத் தொடையாம் என்றவாறு. எதுகையென ஓதினார் ஆயினும். வந்தது கொண்டு வாராதது முடித்தல்' என்பதனான் மோனை இயைபு முரண் அளபெடை என்பனவும் பொழிப்புத் தொடையாம்2 என்று கொள்ளப்படும். உதாரணம் 'அரிக்குரற் கிண்கிணி யரற்றுஞ் சீறடி' (யாப்.வி.ப.130) இது பொழிப்பு மோனை.'பன்னருங் கோங்கின் நன்னலங் கவற்றி.' (யாப்.வி.ப.134) என்பது பொழிப்பெதுகை.'சுருங்கிய நுசுப்பிற் 3பெருகுவடந் தாங்கி.' (யாப்.வி.ப.147) என்பது பொழிப்பு முரண்.'கடலே, கானலங் கழியே கைதையந் துறையே.' என்பது பொழிப்பியைபு.'பூஉங்குவளைப் போஒ தருந்தி.' (யாப்.வி.ப.158) என்பது பொழிப்பளபெடை.(92)
1. புலவராறே என்று மிகுத்துச்சொல்லிய அதனானே அமைவன வேறு எனத்தழீஇப் புகுந்தவற்றுள் ஈண்டுக் கூறாத அந்தாதித் தொடையும் மற்றை விகற்பத் தொடையாகிய ஒரூஉத் தொடையும் கூறிக் கொள்க.(தொல். பொருள். 410. பேரா.) 2.(பாடம்)என்றவாறு. 3.(பாடம்) பெருவடந்
|