செய்யுளியல்

408தொடைநிலை வகையே யாங்கென மொழிப.

என்-னின். இதுவுந் தொடைக்குரிய தோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.

தொடைநிலைவகை மேற் சொல்லப்பட்ட பாகுபாட்டின என்றவாறு.

எனவே வகுத்துணர்த்துவார்க் கெல்லாம் இடனுடைத்து என்றவாறாம்.

அஃதாவது எழுத்தான் வேறுபடுதலும் சொல்லான் வேறுபடுதலும் பொருளான் வேறுபடுதலுமாம்.

இத்துணையுந் தொடை கூறப்பட்டது.

(97)