இதுவும், பாலைக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) அயலோராயினும். (சேரியினும் சுரத்தினும் பிரிதலன்றித்) தமது மனையயற்கண் பிரிந்தாராயினும், அகற்சிமேற்றே - பிரிவின்கண்ணதே. எனவே, ஓர் ஊரகத்து மனையயற்கண்ணும் பரத்தையிற் பிரிவு பாலையாம் என்பதூஉம் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். (41)
|