செய்யுளியல்

412பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்
ஆசிரி யப்பா வெண்பா என்றாங்
காயிரு பாவினுள் அடங்கும் என்ப.
என்-னின் மேற்சொல்லப்பட்ட பாக்களைத் தொகைவகையான் உணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட நான்கு பாவும் ஆசிரியப்பா வெண்பா என இரண்டாய் அடங்கும் என்றவாறு.

அவையடங்குமாறு மேலேவருகின்ற சூத்திரத்தான் உரைப்ப.

(101)