செய்யுளியல்

413ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை
வெண்பா நடைத்தே கலியென மொழிப.
என்-னின். மேல் அடங்குமெனக் கூறப்பட்ட பாக்கள் அடங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஆசிரியம் போன்ற நடையை உடைத்து வஞ்சி, வெண்பாப் போன்ற நடையை உடைத்து கலி என்றுரைப்ப என்றவாறு.

நடையென்றது அப்பாக்கள் இயலுந் திறம்.

(102)