செய்யுளியல்

414வாழ்த்தியல் வகையே1 நாற்பாக்கும் உரித்தே.
என்-னின், வாழ்த்தியற் குரிய பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

வாழ்த்தியலின்வகை நான்குபாவிற்குமுரித்து என்றவாறு.

வகையென்றது தேவரை வாழ்த்தலும் முனிவரை வாழ்த்தலும் ஏனையோரை வாழ்த்தலும், செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க.

(103)

1. 'வகை' என்றதனான் மேற்கூறிய மும்முதற் பொருளின் அறுவகையும் பெரும்பான்மை எனப்படும் என்பதூஉம், அங்ஙனம் வாழ்த்துங்கால் தனக்குப் பயன்படுதலும் படர்க்கைப் பொருட்குப் பயன்படுதலும் என இருவகையான் வாழ்த்தும் என்பதூஉம் இனி முன்னிலையாக வாழ்த்துதலும் இருவகைப்படும் என்பதூஉம் எல்லாம் கொள்க. அங்ஙனம் வாழ்த்தப்படும் பொருளாவன கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடும் என்பன.(தொல், பொருள்,428.பேரா.)