செய்யுளியல்

418அவையடக் கியலே அரில்தபத் தெரியின்
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்
றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே.
என்-னின், அவையடக்கியல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அவையடக்கியலைக் குற்றமற ஆராயின் அறியாதன சொல்லினும் பாகுபடுத்துக் கோடல்வேண்டும் என எல்லா மாந்தர்க்குந் தாழ்ந்துகூறல் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க.

(107)