செய்யுளியல்

419செவியுறை தானே,
பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே.
என்-னின், செவியறிவுறூஉவருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

செவியுறையாவது பெரியோர் நடுவு வெகுடலின்றித் தாழ்ந்தொழுகுதல் கடன் எனச் செவியறிவுறுத்துதல் என்றவாறு.

"அறிமி னறநெறி...பெரியார்வாய்ச்சொல்."

(நாலடி,172)

எனவரும்.

இத்துணையும் பாக்கட்குரிய பொருளுணர்த்தியது.