செய்யுளியல்

425பரிபா டல்லே தொகைநிலை1 வகையின்
இதுபா என்னும் இயனெறி இன்றிப்
பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப.
என் - னின். பரிபாடலாமாறு உணர்த்துதல் நுதலிற்றி.

பரிபாடலாவது தொகைநிலைவகையாற்பா இதுஎன்று சொல்லப்படும். இலக்கணம் இன்றி எல்லாப் பாவிற்கும் பொதுவாய் நிற்றற்கு முரித்தென்று சொல்லுவர் என்றவாறு.

உம்மை எச்சவும்மையாகலான் இலக்கணங் கூறவும்படும். வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும்.

பொதுவாய் நிற்றலாவது.

"ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி மருட்பா"

(செய்யுளியல்.11)

என்றோதப்பட்ட எல்லாப்பாவின் உறுப்பும் உடைத்தாதல்.

(114)

1. விரியின்.