செய்யுளியல்

427சொற்சீ1 ரடியும் முடுகிய லடியும்
அப்பா நிலைமைக் குரிய வாகும்.
என்-னின், இதுவுமது.

சொற்சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்கு உரியவாகும் என்றவாறு.

சொற்சீரடியாவது வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும்.

முடுகியலாவது ஐந்தடியானும் ஆறடியானும் ஏழடியானுங் குற்றெழுத்துப் பயிலத்தொடுப்பது.

(118)

1. சொற்சீரும் முடுகியலும் என்னாது அடி என்றதனான் மேற்கூறிய அடியொடு தொடர்ந்தல்லது வாரா என்பதாம்.............முடுகியல் அடி என்பது முடுகியலோடு விராய்த் தொடர்ந்தொன்றாகிய வெண்பா அடி. (தொல், பொருள், 434. பேரா.)