என்-னின் . அங்கதச் செய்யுளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அங்கதமாவது குற்றமற ஆராயிற் செம்பொருளெனவும் , கரந்த தெனவும் இருவகைப்படும் என்றவாறு. அவை முன்னர்க் காட்டுதும். (118)
1.அரில்தப' என்றது என்னையெனின் அவை புகழ்போன்ற வசையாதலும் பட்டுத் தோன்றும் மயக்க முடைய ஆதலின் மயக்கமறத் தெரியின் என்றவாறு. ' நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திடுவான் ' என்பது புகழ்போன்று வசையாயிற்று.என்னை? கொன்றானாயினும் குறங்கினும் கதத்தண்டு கொண்டு எற்றுதல் குற்றமாதலின் என்பதறிக. கொடைமடங்கூறுதல் வசைபோன்று புகழ் எனப்படும் . அஃது அங்கதம் ஆகாதென்பான் அரில்தப என்றான் என்பது. (தொல் , பொருள் , 436 , பேரா .)
|