செய்யுளியல்

433புகழொடும்1 பொருளொடும் புணர்ந்தன் றாயின்
செவியுறைச் செய்யுள் என்மனார்2 புலவர்.
என் - னின் செய்யுளைப் பாகுபடுத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

புகழொடும் பொருளொடும் புணரவரிற் செவியுறைச் செய்யுள் என்று சொல்லுவர் என்றவாறு.

(122)

1.(பாடம்) துகளொடும் .

2.அதுவெனமொழிப.