செய்யுளியல்

434வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின்
அங்கதச் செய்யுள் எண்மனார் புலவர்.
என் - னின் இதுவுமது .

வசையொடும் நசையொடும் புணர்ந்த செய்யுள் அங்கதச் செய்யுள் எனப்பெயர் பெறும் என்றவாறு.

எனவே , இருவாற்றானும் செய்யுட் செய்யப்பெறும் என்றவாறு.