என் - னின் ஒத்தாழிசைக்கலி பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. தாழிசையுந் தரவுஞ் சுரிதகமும் அடைநிலைக் கிளவியும் என நான்கு உறுப்பினை யுடைத்து ஒத்தாழிசைக் கலி என்றவாறு . தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் எனக் கிடக்கை முறையாற் கூறாது தாழிசை முற்கூறிய வகையான் இப்பாவிற்கும் ஒத்தாழிசை கிறந்ததாதலின் முற்கூறினார் . முற்கூறுகின்றவழியும் ' இடை நிலைப்பாட் எனக் கூறுதலின் முந்துற்றது தரவு என்றவாறாம். இடை நிலைப் பாட்டே டெனினும் தாழிசையெனினும் ஒக்கும் . போக்கெனினும் சுரிதகம் எனினும் வாரம் எனினும் அடக்கியல் எனினு மொக்கும். அடை எனினும் தனிச்சொல் எனினும் ஒக்கும் . தனிச்சொல்லைப் பின் எண்ணிய வதனான் தாழிசைதோறுந் தனிச்சொல் வரவும் பெறும் என்று கொள்க. (125)
1. 'நடைநவின் றொழுகும் ' என்ற தென்னை யெனின் , இத்துணை பயின்று வாராது ஏனை யொன்றும் என்றற்கு என்பது . இடைநிலைப் பாட்டென்பது தாழிசையினை நோக்காது , என்னை? தாழம்பட்ட ஓசை யல்லாதனவும் இடைநிலைப்பாட்டாய் வருமாதலின் என்பது. (தொல் , பொருள் . 444. பேரா.)
|