செய்யுளியல்

438தரவே தானும் நாலடி யிழிபாய்
ஆறிரண் டுயர்வும் பிறவும் பெறுமே.1
என்-னின். தரவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று.

தரவு நாலடியிழிபாகப் பன்னிரண்டடியுயர்பாக , இடைவரும் அடியெல்லாவற்றானும் வரப்பெறும் என்றுகொள்க.

(126)

1.(பாடம்) ஆறிரண் டுயர்பென் றேறவும் பெறுமே.