செய்யுளியல்

439இடைநிலைப் பாட்டே,
தரவகப் பட்ட மரபின என்ப.
என் - னின் , தாழிசைக்கு அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

தாழிசைகள் தரவிற் சுருங்கிவரும் என்றவாறு.

'தரவகப்பட்ட மரபின ' என்றதனால் தரவிற்கு ஓதப்பட்ட நான்கடியின் மிகாதென்பதூஉம் , மூன்றடியானும் இரண்ட்டியானும் வரப்பெறும் என்பதூஉங் கொள்க. வருகின்ற சூத்திரத்துள் " ஒத்து மூன்றாகு மொத்தா ழிசையே " ( செய்யு 137) எனக்கூறுதலானும் இப்பாவினை ஒத்தாழிசைக்கலி யெனக் கூறுதலானுந் தாழிசை ஒருபொருண்மேல் மூன்றடுக்கி வருமென்று கொள்க.

(127)