செய்யுளியல்

443அதுவே,
வண்ணகம் ஒருபோ கெனவிரு வகைத்தே.
என் - னின். மேற்சொல்லப்பட்ட முன்னிலைப்பரவலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

தேவரிடத்து முன்னிலைப்பரவ லாகிய அது தான் வண்ணகமெனவும் ஒருபோகு எனவும் இருவகைப்படும் என்றவாறு.

(131)