செய்யுளியல்

444வண்ணகம் தானே,
தரவே தாழிசை எண்ணே வாரமென்
றந்நால் வகையில் தோன்று மென்ப.
என் - னின். வண்ணக வொத்தாழிசைக்கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

வண்ணக ஒத்தாழிசை யாவது தரவும் தாழிசையும் எண்ணும் சுரிதகமும் என்று சொல்லப்பட்ட நான்கு உறுப்பினையும் உடைத்து என்றவாறு.

(132)