செய்யுளியல்

446ஒத்தமூன் றாகும் ஒத்தா ழிசையே
தரவிற் சுருங்கித் தோன்று மென்ப.
என் - னின் , தாழிசைக்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று.

இச் சூத்திரம் இறந்தது காத்தது என்று கொள்க.

தாழிசையுந் தம்முள் அளவும் ஒத்து மூன்றாகிவரும் , அவை தரவிற் சுருங்கித் தோன்றும் என்றவாறு.

(134)