செய்யுளியல்

448முதற்றொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே.
என் - னின் . எண்ணாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

முதற்றொடுத்த உறுப்புப் பெருகிப் பின்றொடுக்கும் உறுப்புச் சுருங்கிவரும் என்றவாறு.

அதனை இரண்டடியான் வருவன இரண்டும் , ஓரடியான்வருவன நான்கும் , சிந்தடியான் வருவன எட்டும் , குறளடியான் வருவன பதினாறும் எனப் பிறநூலாசிரியர் உரைப்பர் . இவ்வாசிரியர்க்கு வரையறையிலவாம்.

(136)