செய்யுளியல்

451கொச்சக1 ஒருபோ கம்போ தரங்கமென்
றொப்ப நாடி உணர்தல் வேண்டும்.
என்-னின் என்பது மது.

ஒரு போகென்னும் கலி கொச்சகவொருபோகு எனவும் அம்போதரங்கமெனவும் பொருந்த நாடியறிதல் வேண்டும் என்றவாறு.

(139)

1. ஒருபோகு என்பது பண்புத்தொகை. இடை யீடில்லாத நிலத்தினை ஒருபோகென்பவாகலின் அஃது ஒப்பினாகிய பெயர். ஒருபோகென்பதனைத் திரிகோட்ட வேணி என்றது போலக்கொள்க. (தொல். பொருள். 410 பேரா)