என்-னின். அம்போதரங்க வொருபோகுக்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. அம்போதரங்க வொருபோகு அறுபதடி பெருமைக் கெல்லையாம். நடுவாகிய நிலை சிறுமைக்கெல்லையாம் என்றவாறு . செம்பால் வாரம் என்பது செம்பாதி எனவுமாம் . முப்பதடிச் சிறுமை என்றவாறு. (142)
1.இனிச், சிற்றெண் பதினாறும் அராகஅடி நான்குமாக இழுபதடி பெறப்படுங் கொச்சகம் இருமூன்றாகிய பத்தடியின் இகவாது அறுபதடி பெறும் என்றவாறாயிற்று.(தொல்.பொருள்.462.பேரா.)
|