என் - னின். ஆசிரியப்பாவிற்கு எல்லை கூறுதல் நுதலிற்று. ஆசிரியப்பாவின் அளவிற்கு எல்லையாவது; சுருங்கினது மூன்றடி; பெருமை ஆயிரமடியாக இடைப்பட்டன எல்லாவடியானும் வரப்பெறும் என்றவாறு. சுருங்கினபாட்டிற்கு உதாரண மேற் காட்டப்பட்டன. பெரிய பாட்டு பத்துப்பாட்டினுள்ளும், சிலப்பதிகாரத்துள்ளும், மணிமேகலையுள்ளுங் கண்டுகொள்க. ' ஆசிரிய நடைத்தே வஞ்சி ' ( செய்யுளியல். 104) என்றதனான் வஞ்சிப்பாவிற்கும் ஆயிரமடிப் பெருமையாகக் கொள்ளப்படும். (147)
|