செய்யுளியல்

460நெடுவெண் பாட்டே முந்நான் கடித்தே1
குறுவெண் பாட்டிற் களவேழ்2 சீரே.
என் - னின். வெண்பாவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று.

நெடுவெண்பாட்டிற்கு எல்லை பன்னிரண்டடி. குறுவெண்பாட்டிற்கு அடி அளவடியுஞ் சிந்தடியுமாகிய இரண்டடியும் என்றவாறு.

எனவே இடையுள்ள அடிகளெல்லாம் உரிய உதாரண மேற்காட்டப்பட்டது.
(148)

(பாடம்)1. முந்நாலடித்தே.
2. பாட்டின் அளவெழு.